தென்குவளவேலி அரசுப் பள்ளி சார்பில் நாளை இணைய வழி பட்டிமன்றம்

தென்குவளவேலி அரசுப் பள்ளி சார்பில்  நாளை இணைய வழி பட்டிமன்றம்
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளி இலக்கிய மன்றம் சார்பில் நாளை(நவ.12) காலை 10.30 மணிக்கு ‘இந்தத் தீபாவளியின் போது அழிக்கப்பட வேண்டியது நரகாசுரனா? கரோனாசுரனா?’ என்ற தலைப்பில் இணைய வழி பட்டிமன்றம் நடைபெறுகிறது.

இப்பட்டிமன்றத்துக்கு அப்பள்ளியின் ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் நடுவராக செயல்படவுள்ளார். கரோனாசுரனே என்ற அணியில், மதுரை எம்.சி. மாநகராட்சி பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் மாசாணம், மேலூர் சி.இ.ஓ.ஏ மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 மாணவி ஸ்வேதா, கொண்டபெத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 5-ம் வகுப்பு மாணவி பிருந்தா, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவி திவ்யதர்ஷினி, சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி அரசுப் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி செல்வி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நரகாசுரனே என்ற அணியில் கும்பகோணம் பாணாதுறை அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர் மாருதிமாலன், சரஸ்வதி பாடசாலா 5-ம் வகுப்பு மாணவி பூரணி, சி.பி வித்யாமந்திர் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி காவியா, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவி தனு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர் ஞானசேகர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

இந்தப் பட்டிமன்றத்தை https://meet.google.com/zbc-rmoe-vcn என்ற இணைய முகவரியில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in