

அவிநாசியில் தலித் விடுதலை கட்சிஅலுவலகம் மற்றும் காருக்கு தீவைத்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி இஸ்மாயில் வீதியைச் சேர்ந்தவர் எம்.பி.செங்கோட்டையன். தலித் விடுதலை கட்சித் தலைவர். அவிநாசி ராஜாஜி வீதியில் இவரது கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது.
இவருக்கு சொந்தமான வேன் ஓட்டுநரான ராஜ்குமார் என்பவர் நேற்று முன்தினம் இரவுகட்சி அலுவலகம் முன் நிறுத்திசென்றுள்ளார்.
நேற்று அதிகாலைவேன் மற்றும் அலுவலக ஜன்னல் ஆகியவை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
அருகில் வசிப்பவர்கள் பார்த்து,செங்கோட்டையனின் உதவியாள ரான மணிகண்டன் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு அவிநாசி தீயணைப்புத் துறையினர் சென்று, சிறிது நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும், வேன் மற்றும் அலுவலக ஜன்னல் பகுதி எரிந்து சேதமடைந்தன.
இதுதொடர்பாக செங்கோட் டையன் அளித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீஸார் கூறும்போது, “முன்விரோதத்தால் தீ வைக் கப்பட்டதா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்தும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.