கோயிலுக்கு பாலம் அமைத்த ஊராட்சி மன்ற தலைவர்

குமராட்சி அருகே கீழவன்னியூர் வடபத்ரகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கட்டப்பட்ட  சிறிய  பாலத்தை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் திறந்து வைத்தார்.
குமராட்சி அருகே கீழவன்னியூர் வடபத்ரகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கட்டப்பட்ட சிறிய பாலத்தை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் திறந்து வைத்தார்.
Updated on
1 min read

குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவன்னியூர் கிராமத்தில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் வழி சகதியாக உள்ளது.

அதனை சீரமைத்து பாலம் அமைத்து தர வேண்டும் என்று தேர்தலின் போது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர்தமிழ்வாணன், தற்போது ரூ. 45 ஆயிரம்மதிப்பில் கோயிலுக்கு செல்ல சிறியபாலம் அமைத்துள்ளார். இதுகுறித்து தமிழ்வாணன் கூறுகையில், ஊராட்சியில் நிதி இல்லாததால் எனது சொந்த செலவில் கோயிலுக்கு செல்லும் வழியை சீரமைத்து சிறிய பாலத்தை அமைத்துக் கொடுத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in