

குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருவித்துறை சித்திரரத வல்லபப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் பாதுகாப்புடன் தரிசனம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார்.
இதில் மதுரை ஆட்சியர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கோட் டாட்சியர் முருகானந்தம், சோழ வந்தான் சட்டப் பேரவை உறுப்பினர் கே.மாணிக்கம் மற்றும் பல்வேறு துறை அதி காரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வார விடுமுறை நாளில் குரு பெயர்ச்சி வருவதால் பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வருவார்கள்.
இதனால், முகக் கவசம் கட்டாயம். கைகளை கிருமி நாசி னியால் சுத்தப்படுத்த வேண்டும், தனி நபர் இடைவெளி விட வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டோரும் 10 வயதுக்குக் கீழ் உள்ளோரும் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.
சுகாதாரத் துறை சார்பில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.