

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களது குழந்தைகள் தொழிற்கல்வி, பட்டயம், பட்டப்படிப்பு பயில தொகுப்பு நிதியில் இருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்படுறது.
இதற்கு அனைத்து தாலுகா அலுவலகங்களில் இயங்கி வரும் இ-சேவை மையங்களில் edu.exweletutor.com/eduscholarship என்ற இணையதளம் மூலம் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநரை நேரிலோ (04546) 252185 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.