

ரூ.43,600 அடிப்படை சம்ப ளத்தைக் காட்டிலும் அதிகமாக வாங்கும் மத்திய அரசு ஊழியர்கள் இரவுப் பணி புரியும்போது ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தற்போது இந்த ஊக்கத் தொகையை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 2017 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டுள் ளனர்.
இந்த உத்தரவை திரும் பப்பெற வலியுறுத்தி மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ, எல் ஆர்எஸ் ஆகியவை சார்பில் ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓடும் தொழிலாளர்கள் பிரிவு கோட்டத் தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். செயலர் அழகுராஜா முன்னிலை வகித்தார்.
எஸ்ஆர்எம்யூ கோட்டச் செயலர் ஜேஎம்.ரபீக், உதவிக் கோட்டச் செயலர் வி.ராம்குமார் சிறப்புரை யாற்றினர். உதவிக் கோட்டச் செயலர்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.