

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 15,670 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 13,274 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 95.44 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 95.46 அடியானது. நீர் இருப்பு 59.11 டிஎம்சி-யாக உள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. வீரகனூரில் 38 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தில் பிற ஊர்களில் பெய்த மழை (மில்லி மீட்டரில்) விவரம்: கெங்கவல்லி 23, தம்மம்பட்டி 15, எடப்பாடி 11.6, சங்ககிரி 3.2, கரியகோவில் 4, ஏற்காடு 2.8, ஆத்தூர் 2.4, மேட்டூர் 1.4 மிமீ மழை பதிவானது.