

ஓமன் நாட்டில் சிக்கியுள்ள திருநெல்வேலி மூளிக்குளத்தைச் சேர்ந்த பொறியாளர் மணிராஜை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மீண்டும் மனு அளித்தனர்.
இது தொடர்பாக கடந்த சிலமாதங்களுக்குமுன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்த அவரது மனைவி வேல்மதிமற்றும் உறவினர்கள் நேற்று மீண்டும் ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சிமாவட்ட பொருளாளர் சாந்திஜாபர் தலைமை வகித்தார். செய்திதொடர்பாளர் ஜமால், மாணவரணி நிர்வாகி நயினார் முன்னிலை வகித்தனர். தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி தமிழரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.