

மதுரை விமானநிலைய ஓடுதளம் விரிவுபடுத்தும் பணி விரைவில் தொடங்கும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். பின்னர் விமான நிலைய விரிவாக்கப் பகுதிக்கு அமைச்சர் நேரில் சென்று பார்த்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள நீர் மேலாண்மைத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தியதற்கான மாநிலங்களின் தர வரிசையில் தமிழகம் தேசிய அளவில் முதலி டம் பிடித்துள்ளது. மதுரை மாநக ராட்சி நீர் மேலாண்மையை சிறப்பாகக் கையாண்டதற்காக இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,433 கோடியில் குடிமராமத்துப் பணி போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். ராமநாதபுரம், புதுக்கோட்டை நீராதாரத்தைப் பெருக்க ரூ.1,400 கோடியில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் தொழில், பொருளாதார வளர்ச்சி, மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம், உயர் கல்விச் சேர்க்கை, வேளாண் உற்பத்தி, கரோனா தடுப்பு ஆகிய நடவடிக்கைகளில் முதலிடம் பெற்றுள்ளோம். இன்றைக்கு நீர் மேலாண்மையிலும் தமிழகத்துக்கு தேசிய விருது பெற்றுத்தந்த முதல் வருக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் ‘நீர் மேலாண்மை புரட்சி யாளர்’ என்ற பட்டத்தைச் சூட்டு கிறோம்.
மதுரை விமான நிலையத்தில் 1.5 கிலோ மீட்டர் முதல் 2 கி.மீ. ஓடுதளம் விரிவாக்கப் பணி நடைபெற உள்ளது. இதற்காக 90 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. ஓடுதள விரிவாக்கம் நடைபெற உள்ள பகுதியில் திருமங்கலம் சுற்றுச் சாலை அமைந்துள்ளது. எனவே இப்பகுதியில் வாரணாசி விமான நிலையம் போன்று மேலே விமானதளமும், கீழே சாலையும் அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஓடுதளம் விரிவாக்கப் பணி விரை வில் தொடங்கும். இதற்கான அடிக் கல் நாட்டு விழாவில் முதல்வர் பங்கேற்பார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அப்போது ஆட்சியர் அன் பழகன், எம்எல்ஏக்கள் மாணிக் கம், எஸ்.எஸ்.சரவணன், பெரிய புள்ளான், விமான நிலைய அதிகாரி செந்தில்வளவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.