கரோனா தடுப்பு ஆய்வுக்காக விருதுநகர் வரும் முதல்வருக்கு வரவேற்பு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவுவிருதுநகர் வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

Updated on
1 min read

வரும் 11-ம் தேதி விருதுநகர் வரும் முதல்வர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும், கரோனா தடுப்பு குறித்து ஆலோசனை செய்யவும் முதல்வர் பழனிசாமி நவ.11-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விருதுநகர் வருகிறார். அப்போது அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக விருதுநகர் தொகுதி அதிமுகவினருடன் மாவட்டப் பொறுப்பாளரும் பால்வளத்துறை அமைச் சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் தொழில் அதிபர் கோகுலம் தங்கராஜ், மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், பொதுக்குழு உறுப் பினர் பாபுராஜ், ஒன்றியச் செய லாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், நகரச் செயலாளர் முகம்மது நெய்னார், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுமதிராஜசேகர், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் மச்சராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in