அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் விருப்பப்படி கார்த்திகை தீபத் திருவிழாவை வழக்கம்போல் நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் விருப்பப்படி  கார்த்திகை தீபத் திருவிழாவை வழக்கம்போல் நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்
Updated on
1 min read

அண்ணாமலையார் கோயிலில் கரோனா விதிகளை பின்பற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை வழக்கம்போல் நடத்த வேண்டும் என திருவண்ணாமலை சட்டப் பேரவை உறுப்பினரும் திமுக முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "சைவத்தின் தலைநகராக விளங்கும் தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான நாட்கள் நெருங்கி வருகிறது. ஆனால், விழாவுக்கான முன்னேற்பாடுகள் ஏதும் நடைபெறவில்லை. கரோனா தோற்று பரவி வரும் நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா வழக்கம்போல் நடைபெறுமா? என்ற கவலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு வழிகாட்டி

இந்த விழாக்களை போன்று கரோனா தடுப்பு வழிகாட்டி நெறி முறைகளை பின்பற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த வேண் டும். பஞ்சமூர்த்திகளின் மாட வீதி உலாவை வழக்கம் போல் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாட வீதியுலா...

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோரிடம் ஆலோசித்து வழக்கம் போல் திருவிழா நடைபெற நடவடிக்கை எடுத்து வருவதாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கூறுகின்றனர்.

பக்தர்கள், ஆன்மிக பெரு மக்கள், உபயதாரர்கள், முன் னாள் அறங்காவலர்கள் ஆகி யோரது வேண்டுகோளை ஏற்று, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின் பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in