

மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மையில் தேசிய அளவில் மதுரை மாநகராட்சி இரண்டாவது இடம் பெற்றுள்ளது.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளாக நீர் ஆதாரத் தைப் பெருக்கும் வகையில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற் படுத்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தாத கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதியை நிறுத்தி வைத்தது. அதேபோல், மாநகர் பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 33 குளங்களையும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதில், 11 குளங்கள் தூர்வாரப் பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் மழையால் அந்த குளங்களில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. மேலும் 16 குளங்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
நகர்ப் பகுதியில் குடிநீரு க்காக தோண்டப்பட்டு போதிய நீர் இல்லாததால் பயன்படுத் தாமல் விடப்பட்ட 412 ஆழ் துளைக் கிணறுகளை கண்டறி ந்து, அவற்றை மழைநீர் சேகரி ப்பு அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.
மாநகர் பகுதியில் 266 தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
40 ஆண்டுகளுக்குப் பின் கால்வாய் புதுப்பிக்கப்பட்டு வண்டியூர் தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண் ணீர் கொண்டு வரப்பட்டது. தல் லாகுளம் பெருமாள் கோயில் தெப்பக்குளம், டவுன் ஹால் ரோடு கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் மழை நீரைச் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநகரில் நிலத்தடி நீர்மட்டம் உயரத் தொடங் கியுள்ளது.
மதுரை மாநகராட்சியின் இந்த நீர் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் 'ஜல்சக்தி அபியான்" என்ற மத்திய அரசின் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தில் சிறப்பாக செயல் பட்ட மாநகராட்சிகளை தற்போது மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முதல் இடத்தை யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவில் உள்ள போர்ட் பிளேர் மாநகராட்சி பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தை மதுரை மாநகராட்சி பெற்றுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா விரைவில் டெல்லியில் நடக்க உள்ளது. மதுரை மாநகராட்சி சார்பில் விழாவில் பங்கேற்று ஆணையர் ச.விசாகன் விருதைப் பெறவுள்ளார்.