பணிப்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பணிப்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு பொறியியல் பிரிவில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு விண் ணப்பிக்கலாம், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு பொறியியல் பிரிவில் காலியாகவுள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்விரு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். முழு நேரம் அல்லது பகுதி நேரமாக டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் கல்வித்தகுதி பெற்றவராக இருக்க வேண் டும்.

தொலைதூரக்கல்வி மூலமாக சான்றிதழ் பெற்றிருந்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேலும், காலியிடங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட இனச்சுழற்சி முறை, மாதிரி விண்ணப்பப் படிவம் உட்பட இதர விவரங்கள் www.ncs.gov.in என்ற தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும், www.namakkal.nic.in என்ற நாமக்கல் மாவட்ட இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சுய அத்தாட்சி செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் மாவட்ட ஆட்சியர், நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரகம் மூன்றாம் தளம், நாமக்கல் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக டிச., 8-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in