

கோபி டி.ஜி.புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு வரும் 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஈரோடு மாவட்டம் கோபி டி.ஜி.புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிட்டர், மெக்கானிக் மோட்டார் வெகிகிள், மெக்கானிக் ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏர்கண்டிஷனிங், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெல்டர் ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. இந்த பிரிவுகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கு வரும் 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியில் சேரும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா பயிற்சியுடன், அரசால் மாதம் ரூ.750 உதவித் தொகை, விலையில்லா பாட புத்தகங்கள், மடிக்கணினி, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், தையற்கூலியுடன் இரண்டு செட் சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து பாஸ் சலுகைகள் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு 04285-233234, 9499055706, 9499055705 என்ற எண்களில் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என ஐடிஐ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.