வேல் யாத்திரை அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மறியல்: 518 பாஜகவினர் கைது

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்துகள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்துகள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
Updated on
1 min read

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக் கப்பட்டதை கண்டித்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்திய பாஜகவினர் 518 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை கண்டித்து கட லூரில் தலைமை தபால் நிலையம் அருகே, மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் பாஜகவினர்சாலை மறியலில் ஈடுபட்டனர். வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததமிழக அரசைக் கண்டித்து முழக் கங்கள் எழுப்பினர்.

மறியலில் ஈடுபட்ட 142 பாஜக வினரை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுலகம் எதிரே பாஜக மாவட் டத் தலைவர் பாலசுந்தரம் தலை மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 8 இடங்களில் பாஜவினர் போராட்டம் நடத்தநேற்று திரண்டனர். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பாஜக மாவட்டத்தலைவர் கலிவரதன் உள்ளிட்ட 226 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in