

வேல் யாத்திரைக்கு அரசு தடை விதித்ததைக் கண்டித்து மதுரை உட்பட ஆறு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
பாஜக மாநிலத் தலைவர் முருகன் நவ.6 முதல் டிச.6-ம் தேதி வரை அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபடும் வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரைதிண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த பாரதிய ஜனதா கட்சியினர்.
மதுரை மாவட்டம் செக்கானூரணி தேவர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் செய்த மாநில பாஜக செயலர் சீனிவாசன், மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்டச் செயலர் முருகன் உட்பட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர்
இதேபோல் சிவகாசி சார்- ஆட்சியர் அலுவலகம் முன் மேற்கு மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த 18 பெண்கள் உட்பட 173 பாஜகவினரை சிவகாசி நகர் போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல்
தேனி
சிவகங்கை
ராமநாதபுரம்