

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 2019-ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் முதல் நிலை மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றேன். நேர்முகத் தேர்வு பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை. தமிழ் வழியில் கல்வி பயின்றவர் களுக்கான இட ஒதுக்கீட்டிலும் தேர்வாகவில்லை.
தமிழத்தில் அரசு வேலை வாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இடஒதுக்கீடு சலுகை பெற எனக்குத் தகுதி உண்டு. இருப் பினும் அந்தச் சலுகை எனக்கு வழங்கப்படவில்லை.
அதேநேரம், தொலைநிலைக் கல்வியில் தமிழ் வழியில் படித் தவர்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்படுகிறது.
எனவே, குரூப் 1 தேர்வுப் பட்டியலுக்குத் தடை விதித்து, தொலைநிலைக்கல்வி இல் லாமல் நேரடியாக தமிழ் வழி யில் கல்வி பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் என்.கிரு பாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.