

மதுரை மாவட்டம் வலையங் குளம் பகுதியிலுள்ள சவுரா ஷ்ட்ரா காலனியில் வசிப்பவர் அன்சாரி(45). இவர், தடை செய்யப்பட்ட குட்கா, புகை யிலைப் பொருட்களை மொத்தமாக வாங்கி, கடைகளில் விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி உத்தரவின்பேரில் பெருங்குடி போலீஸார் அன்சாரியின் நட வடிக்கைகளை தொடர்ந்து கண் காணித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் போலீஸார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அங்கு சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 65 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அன்சாரியை போலீஸார் கைது செய்தனர்.