

மதுரை வடக்கு தொகுதி பாஜக சக்தி கேந்திரக் கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. புதூர் மண்டல் தலைவர் பாஸ்கர் வரவேற்றார்.
இதில் திருச்சி பார்த்திபன் பேசுகையில், சக்தி கேந்திரப் பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள் கடுமையாக உழை க்க வேண்டும்.
பூத் ஏஜெண்டுகள் பாஜக செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றார். வடக்குத் தொகுதி பொறுப் பாளர் செல்வகுமார், இளைஞர் அணி நிர்வாகி மாரி சக்கரவர்த்தி, தல்லாகுளம் மண்டல் தலைவர் பாலமுருகன், வீரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.