

சேலத்தில் கஞ்சா பதுக்கிய பெண் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சேலம் டவுனில் காதர் செரீப் (50) என்பவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டமும், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ராகு (26) என்பவரிடம் 1,200 கிராம் கஞ்சா, கிச்சிப் பாளையம் வெள்ளையன் (31), கந்தாயி (61) ஆகியோரிடம் 2,500 கிராம் கஞ்சா, கொண்டலாம்பட்டி சிதம்பரம் (45) என்பவரிடம் 550 கிராம் கஞ்சா, அம்மாப்பேட்டைஆகாஷ்குமார் (19), ஹரி (19), விக்ரம் (19) ஆகியோரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 8 பேரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், 8 பேரும் கஞ்சாவை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.