விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
Updated on
1 min read

கரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற வில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர், நிர்வாகக் காரணங்களால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 6-ம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற இருந்த விவசாயி கள் குறைதீர் கூட்டம் நிர்வாகக் காரணங்களால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in