

தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள சாலைகள் அனைத்தும் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன.
இதனால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த சாலைகளை சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாலிபர் சங்கத்தின் மாநகரப் பொருளாளர் பாலா தலைமை வகித்தார். மாதர் சங்க மாநகரத் தலைவர் கமலா முன்னிலை வகித்தார்.
ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முத்து, இந்திய மாணவர் சங்க மாநகரத் தலைவர் கார்த்திக், மாதர் சங்கத்தின் கிளை தலைவர்கள் வின்கலன், கற்பகவள்ளி, சுபாராணி மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.