எம்ஜிஆர் திட்டு மீனவர் கிராமத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு

சிதம்பரம் அருகே எம்ஜிஆர் திட்டு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவ சிலையை எம்எல்ஏ பாண்டியன் திறந்து வைத்தார்.
சிதம்பரம் அருகே எம்ஜிஆர் திட்டு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவ சிலையை எம்எல்ஏ பாண்டியன் திறந்து வைத்தார்.
Updated on
1 min read

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் திட்டு மீனவர் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவச் சிலையை,கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பின ருமான பாண்டியன் நேற்று திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் கலைமணி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் அசோகன், பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அன்பு ஜீவா வரவேற்று பேசினார்.

மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர்வீராசாமி, தமிழரசன்,தனஜெய ராமன், பொன்னுசாமி, கலை யரசன், ரவி, நாகராஜ், சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள், ஊர் நிர்வாகத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எம்ஜிஆர். மன்ற துணை செயலாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in