பெரம்பலூரில் வட்டாட்சியர் அலுவலகம்: காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்

பெரம்பலூரில் வட்டாட்சியர் அலுவலகம்: காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்
Updated on
1 min read

பெரம்பலூரில் ரூ.2.53 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

7123.12 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள தரைதளத்தில் வரவேற்பு அறை, வட்டாட்சியர் அறை, வட்டாட்சியர் அலுவலக அறை, நில அளவைகள் அறை, கணினி அறை, பதிவு அறை மற்றும் கழிப்பறைகள் உள்ளன. மேலும் 6348.40 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள முதல்தளத்தில் வட்டாட்சியர்(வட்ட வழங்கல் அலுவலர்) அறை, அலுவலக அறை, கூட்ட அரங்கம், வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் நலதிட்ட அலுவலர்) அறைகள், பதிவு அறை, எழுது பொருள் வைப்பு அறை, கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கட்டிடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ப. வெங்கடபிரியா, எம்எல்ஏக்கள் இரா.தமிழ்ச்செல்வன், ஆர்.டி.ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், கோட்டாட்சியர் சக்திவேல், வட்டாட்சியர் அருளானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in