

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோயில் செயல் அலுவலர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் கோயிலுக் குச் சொந்தமான யானை தெய்வானை தாக்கியதில் பாகன் காளிதாசன் மே 24-ல் உயிரிழந்தார். இதையடுத்து, கால்நடை மருத்துவரின் ஆலோ சனையின்பேரில் யானை தெய்வானை திருச்சி யானைகள் காப்பகத்துக்கு ஜூன் 1-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து, அக்.6-ம் தேதி தெய் வானை பொள்ளாச்சி ஆனை மலைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
இந்நிலையில், ஜூன் 1 முதல் ஆக.31 வரை தெய்வானையை பராமரித்ததற்காக ரூ.3,04,032 கட்டணம் செலுத்துமாறு திருச்சி மாவட்ட வனப் பாதுகாவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கால் நடை மருத்துவரின் அறிவுரை யின்பேரில்தான் தெய்வானை திருச்சி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனவே, கட்டணம் செலுத்தக் கோரி வனத் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்து, திருச்சி மாவட்ட வனப் பாதுகாவலர் அனுப் பிய நோட்டீஸுக்கு இடைக் காலத் தடை விதித்ததுடன், இதுகுறித்து தமிழக முதன்மை வனப் பாதுகாவலர், திருச்சி மாவட்ட வனப் பாதுகாவலர் ஆகி யோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.