

சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், புதுப் பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு பிரீமியத் தொகை ரூ.421 ஆகும். காப்பீடு செய்ய இம்மாதம் 30- ம் தேதி கடைசி நாளாகும்.
பொதுச்சேவை மையங்கள் மூலம் நெற் பயிரை காப்பீடு செய்ய, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம்,அடங்கல் "அ" பதிவேடு நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டுச் செல்ல வேண்டும்.
கடன் பெறும் விவசாயிகளுக்கு, அவர்களின் விருப்பக் கடிதம் பெற்று அதன் பின்னரே வங்கிகள் காப்பீடு தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என்று விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.