தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் உளவியல் சார் இணைய வழி கருத்தரங்கம்

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் உளவியல் சார் இணைய வழி கருத்தரங்கம்
Updated on
1 min read

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் உளவியல் துறையில் அண்மையில் ‘சிறந்த மன ஆரோக்கியத்திற்கான செயல் முறை’ என்னும் தலைப்பில் இணைய வழி பன்னாட்டுக் கருத் தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் முனைவர்உத்ரா துவக்கவுரை ஆற்றினார்.உளவியல்துறைத்தலைவர் முனைவர்சுரேஷ் வரவேற்புரையையும் அறிமுகவுரை யையும் நன்றியுரையும் வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பிருந்தா நோக்கவுரை யையும், பதிவாளர் முனைவர் செளந்தரராஜன் வாழ்த்துரை யையும் வழங்கினர். இக்கருத்தரங்கில் மலேசியாவின் டெரங்கனு நகரிலுள்ள சுல்தான் செய்நல்அபிதின் பல்கலைக் கழகத்தின்மருத்துவவியல் துறையின் இணைப்பேராசிரியரும் மனநல மருத்துவருமான முனைவர் ரொஹயா ஹுசைன் சிறப்புரையாற்றினார்.

“மனதை ஒரு நிலைப்படுத்தும் செயல்பாடு என்பது மிக முக்கியமானது. நம் எண்ணங்களில் விழிப்புணர்வோடு இருப்பதோடு இது தொடர் புடையது. 3 நிமிட மூச்சுப் பயிற்சியின் வழியே மனதை ஒரு நிலைப்படுத்த இயலும்’‘ என்று பேசி அதற்கான செய்முறை விளக்கத்தைச் செய்து காண்பித்தார். “அனைத்து மத மற்றும் கலாச்சார ஒருங்கிணைவின் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்தல் செயல்பாடு தொடர்ந்து நிகழ்கிறது. அன்றாட வாழ்வில் இப்பயிற்சியை மேற்கொள்வதின் மூலம் கவலை, பதற்றம் ஆகியவற்றை வெற்றி கொள்ள முடியும்” என்றார்.

இக்கருத்தரங்கில் உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட 406 நபர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in