குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்

குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் 4 இடங்களில் குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் வரும் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடக்கிறது.

சேலம் கன்னங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் 6-ம் தேதி மருத்துவர்கள் சுஜாதா, ராணி, ராஜன், ரமேஷ், செந்தில்வேல் ஆகியோர் தலைமையிலும், 7-ம் தேதி பேளூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 9-ம் தேதி தலைவாசலிலும், 10-ம் தேதி தாரமங்கலத்திலும் குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது. முகாமில், குழந்தை பிரசவித்து 7 நாட்களான பெண்கள், மாதவிடாய் முடிந்து 8 நாட்களான பெண்கள், குழந்தை பிரசிவித்து 42 முதல் 55 நாட்களானவர்கள் மற்றும் இதர பல பிரிவுகளில் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in