கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று பாராட்டு தெரிவித்தார்.

அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அண்மையில் அர சாணை வெளியிட்டது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து நீர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 11 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூரில் நேற்று வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

இதேபோல, பெரம்பலூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அபிதா, அருண்மொழி, கார்த்திகேயன், திவ்யா, கார்த்திகேயன் (2018-ம் ஆண்டு மாணவர்), செட்டிக்குளம் அரசுப் பள்ளி மாணவர் சத்தியமூர்த்தி, எறையூர் அரசுப் பள்ளி மாணவர் செல்வகுமார், ஓகளுர் அரசுப் பள்ளி மாணவர் கார்த்திக், அம்மாபாளையம் அரசுப் பள்ளி மாணவி காவியா ஆகிய 9 பேர் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்த 9 பேரையும் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று நேரில் வரவழைத்து ஆட்சியர் ப. வெங்கடபிரியா புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் கள் மாரிமீனாள் (பெரம்பலூர்), குழந்தைராஜன் (வேப்பூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in