

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி தலைமைக் காவலர்கள் தூத்துக்குடி வடபாகம் செந்தட்டி, புதுக்கோட்டை அய்யன்பெருமாள், சேரகுளம் ராமகிருஷ்ணன், தட்டப்பாறை அசோக் குமார், தூத்துக்குடி தென்பாகம் கதிரேசன், நாலாட்டின்புதூர் கனகசுந்தரம், தூத்துக்குடி வடபாகம் தர் நாராயணன், ஏரல் பண்டாரசிவன், தூத்துக்குடி தென்பாகம் முருகன், திருசெந்தூர் தாலுகா காவல் நிலையம் சடாமுனியன் என்ற கிருஷ்ணன், தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமை பிள்ளைமுத்து, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அய்யன்பெருமாள், எஸ்பி தனிப்பிரிவு சண்முகராஜ், மாவட்ட குற்றபிரிவு காசிராஜன், போதைப் பொருள் தடுப்பு பிரிவு சுப்பையா, எஸ்பி தனிப்பிரிவு பேச்சியப்பன், அதிரடிப்படை அகஸ்டின் சாமுவேல், குரும்பூர் தர் ஆகியோர் பதவி உயர்வு பெற்று சிறப்பு எஸ்ஐக்கள் ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.