

திருநெல்வேலி மாவட்டத்தில் 29 பேருக்கு நேற்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,289 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 13,929 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 28 பேர் குணமடைந்தனர். தற்போது மருத்துவமனைகளில் 152 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 7,849 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 7,651 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 43 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,023 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 36 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 14,562 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம்இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,154 ஆகஅதிகரித்துள்ளது. நேற்று 54 பேர்உட்பட இதுவரை 14,605 பேர்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 419 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.