நில உச்ச வரம்புச் சட்டத்தில் தளர்வு தமிழக முதல்வருக்கு ஏ.இ.பி.சி நன்றி

நில உச்ச வரம்புச் சட்டத்தில் தளர்வு தமிழக முதல்வருக்கு ஏ.இ.பி.சி நன்றி
Updated on
1 min read

ஏ.இ.பி.சி (Apparel Export Promotion Council) அகில இந்தியத் தலைவர் ஏ.சக்திவேல், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணியும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியும் பாராட்டுக்குரியது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக, கரோனா காலத்திலும் ரூ. 4000 கோடிக்குமேல் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, ஏராளமான புதிய தொழில்களும், வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.இதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்துறை சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி.

இந்த வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நிலத்தின் உச்சவரம்பு நிர்ணயம்) சட்டத்தின் விதிமுறைகளை தளர்த்தி, உபரி நிலத்தை தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்களே தங்கள் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்வதற்கு அரசாணை வெளியிட்டதற்கும் நன்றி. இதனால் சுமார் 400 தொழிற்சாலைகள் பயனடைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் தொழில்துறை மேலும் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in