

தற்போது பஞ்சவர்ணம் குடும்பத்தினர் கோயில்களில் தஞ்சம் புகுந்து அஞ்சி வாழ்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பஞ்சவர்ணம் குடும்பத்தினரை, அவர்களது சொந்த ஊரிலேயே வசிக்கவும், தொழில் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தங்கள் அலுவலகத்திலேயே அனைத்துக் குடும்பங்களும் குடியேறி கஞ்சி காய்ச்சிக் குடித்து பாதுகாப்பாக இருக்க அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.