கூட்டுறவு வங்கியில் பணம் மோசடி ரவணசமுத்திரம் மக்கள் புகார்

கூட்டுறவு வங்கியில் பணம் மோசடி நடைபெற்றதாக தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த ரவணசமுத்திரம் பகுதி மக்கள்.
கூட்டுறவு வங்கியில் பணம் மோசடி நடைபெற்றதாக தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த ரவணசமுத்திரம் பகுதி மக்கள்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தில் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில்ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு சிறு சேமிப்பு, வைப்பு நிதி, நகைக் கடன், விவசாய கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள் பணம் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் உறுப்பினர்கள் சிலர் தங்களது கணக்கில் உள்ள சேமிப்பு பணத்தைகேட்டு சென்றபோது, கணக்கில் தொகை இல்லை என்று வங்கியில் கூறியதாக தெரிகிறது.

இச்சம்பவம் அறிந்த பலர் தங்களது கணக்குகளை சரிபார்த்தபோது, பலரது கணக்குகளில் சிறு தொகையை மட்டும் வைத்துவிட்டு, பெரும் தொகை எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது தெரியவந்ததாகவும், பணத்தை மீட்டுத் தரக் கோரியும் தென்காசி ஆட்சியர்அலுவலகத்தில் ஏராளமானோர் மனு அளித்தனர்.

மனு அளித்தவர்கள் கூறும்போது, “உறுப்பினர்களின் சேமிப்புபணத்தை மோசடி செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிள்ளைகளின் திருமணம், படிப்பு, வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்த பணத்தை இழந்து தவிக்கிறோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in