

திருநெல்வேலி: திருநெல்வேலி மின் நுகர்வோர் மையம் சார்பில் மின் சிக்கனம், மின் சேமிப்பு, மின்சாரம் சம்பந்தமான குறைபாடுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. திருநெல்வேலி மின் நுகர்வோர் மைய இயக்குநர் கோ.முருகமுரளிதரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சு.முத்துசாமி வரவேற்றார். ஆராய்ச்சியாளர் பாலாஜி கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு மின்சார வாரியசெயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி தொடங்கி வைத்தார். மின்நுகர்வோர் மைய ஆலோசகர் சு.சண்முகம், பெட்காட் மாவட்ட செயலாளர் கோ.கணபதிசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.