திண்டுக்கல்லில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

திண்டுக்கல்லில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்
Updated on
1 min read

திண்டுக்கல்லில் மதிமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செல்வராகவன் முன்னிலை வகித்தார். கொள்கை பரப்புச் செயலாளர் அழகுசுந்தரம், தேர்தல் பணிக் குழு செயலாளர் அந்திரிதாஸ் பங்கேற்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் சுதர்சன், தீர்மானக் குழு உறுப்பினர் தமிழ்வேந்தன், திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் மோகன், நகரச் செயலாளர் செல்வேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in