மறைந்த வேளாண்மை துறை அமைச்சருக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு வாணியம்பாடி எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அடுத்த படம்:  வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே துரைக்கண்ணு உருவப்படத்துக்கு அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில், மாவட்டப் பொருளாளர் எம்.மூர்த்தி உள்ளிட்டோர்.

Updated on
1 min read

மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவப் படத்துக்கு அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், தமிழக வேளாண் துறை அமைச்சருமான துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, அவரது உருவப்படத்துக்கு அமைச்சர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலை அருகே அமைச்சர் துரைக் கண்ணு உருவப்படத்துக்கு தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.

அதேபோல, வாணியம்பாடி சட்டப்பேரவை அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, நகரச்செயலாளர் சதாசிவம், ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், மகளிரணி செயலாளர் மஞ்சுளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகம் அருகே மாநகர அதிமுக சார்பில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு மாநகர மாவட்டச்செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப் போது, மாவட்டப் பொருளாளர் எம்.மூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in