தீபாவளியை கொண்டாட குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் தமிழக அரசுக்கு முத்தரசன் கோரிக்கை

இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்
Updated on
1 min read

கரோனா காலத்தில் மக்கள் தீபா வளி பண்டிகையைக் கொண்டாட அரசு குடும்ப அட்டைக்கு அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வில்லிபுத்தூரில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் தி.ராமசாமி எழுதிய `எனது அரசியல் பயணம்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முத்தரசன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:

கரோனா ஊரடங்கால் பொதுமக்கள் மிகுந்த பொருளாதார நெருக் கடியில் இருப்பதால், வரக்கூடிய தீபாவளியைக் கொண்டாட முடியாத சூழ்நிலையில் உள்ளனர். ஆகையால் தீபாவளி நிவா ரணத் தொகையாக குடும்ப அட் டைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கினால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று தெரிந்தும் முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் ஒரு நாள் இரவில் பெய்த மழை சென்னையைச் சீரழித்துவிட்டது.

எனவே, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக தனதுமுதல்வர் வேட்பாளரை அறிவித் துள்ள நிலையில், அதன் கூட்ட ணியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன், நாங்கள்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்று கூறியது குறித்து அதிமுக தலை மைதான் பதிலளிக்க வேண்டும், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in