கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து சரிவு

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து சரிவு

Published on

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 972 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 566 கனஅடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 49.25 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து சிறிய மதகுகள் மற்றும் பாசனக்கால்வாய்கள் வழியாக 449 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in