

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நவம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் முகாம் நடத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடை யாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டையை பெறுவதற்காக தொலைதூரத்தில் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர். மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை போக்க, வட்ட அளவில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
நவம்பர் 3-ம் தேதி ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 5-ம் தேதி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 7-ம் தேதி செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்திலும், 10-ம் தேதி கீழ் பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 12-ம் தேதி வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவல கத்திலும், 18-ம் தேதி தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத் திலும், 19-ம் தேதி செங்கம் வட் டாட்சியர் அலுவலகத்திலும், 24-ம் தேதி ஜமுனாமரத்தூர் வட்டாட் சியர் அலுவலகத்திலும், 25-ம் தேதி சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திலும் முகாம் நடத்தப்பட உள்ளது. குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நகல், ஆதார் அட்டை நகல், 4 புகைப்படங்களுடன் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வரும் மாற்றுத் திறனாளிகள் முகாமுக்கு வர வேண்டும்.
முகாம் நடைபெற உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில், அந்தந்த பகுதி மக்கள் கலந்து கொள்ளலாம். புதிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.