

கரூரைச் சேர்ந்த இளங்கோவன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தாந்தோணி பாலாஜி நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஓடை மற்றும் வாய்க்கால் அமைந்துள்ளன. மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் தேங்காமல் ஓடை வழியாகச் சென்றுவிடும். தற்போது இந்த ஓடை வாய்க்காலை பலர் ஆக்கிரமித்து முள் வேலி அமைத்து மரக்கன்று நட்டு யாரும் செல்ல முடியாதபடி இரும்புக்கதவு அமைத்துள்ளனர்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், வட்டாட்சியர் ஆகியோருக்கு புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்பை அகற்ற நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே ஓடை, வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு நிலம் ஓராண்டாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
அரசு வழக்கறிஞர் வாதிடு கையில், ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத் தால், ஆக்கிரமிப்பாளர்கள் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவிக்கின்றனர் என்றார்.
அதற்கு நீதிபதிகள், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் போராட்டம் நடத்தினால் அதிகாரிகள் திரும்பி விடு வார்களா?.
நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தார்கள்?. கடமை தவறிய அதிகாரி மீது என்ன நட வடிக்கை எடுக்கப்படுகிறது? என்று கேட்டனர்.
பின்னர், மனுதாரர் தெரிவித்துள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை உடனடியாக அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்