

குஜராத் மாநிலம் வதோதராவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்.
அவரை எதிர்த்துப் போடியிட்ட காங்கிரஸ் கட்சியின் மதுசூதன் மிஸ்திரியை விட 1.68 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 நாடாளுமன்ற தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.