காங்கிரஸ் செயற்குழு கூடுகிறது

காங்கிரஸ் செயற்குழு கூடுகிறது
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் பெரும் சரிவை சந்தித்துள்ளதால், தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயவும் எதிர்கால உத்திகளை வகுக்கவும் காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகார அமைப்பான காங்கிரஸ் செயற்குழு மே 19-ம் தேதி கூடுகிறது.

மன்மோகன் சிங் தலைமையி லான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் செயல்பாடு, தேர்தலை எதிர்கொள்ள கட்சி தீட்டிய திட்டங்கள், காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைமையேற்று வழி நடத்திய விதம் ஆகியவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு அமைந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ள கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும், ஆராய வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

‘தேர்தல் முடிவுகள் பற்றி ஆழ்ந்து ஆராய வேண்டியது அவசியமாகி உள்ளது. அதன் பிறகு அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகள் அமல்படுத்தப் படும்’ என்று கூறி இருக்கிறார் காங்கிரஸ் செயற்குழு சிறப்பு அழைப்பாளர் அனில் சாஸ்திரி. இதுகுறித்து ராகுல் காந்திக்கு சில தினங்களில் கடிதம் எழுது வேன் என்றும் அனில் சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in