

மக்களவை தேர்தலில், மோடி வித்தை பலித்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
16-வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடு முழுவதும் அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளது.
பாஜக அறுதிப்பெரும்பான்மையையும் பெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராவது உறுதியாக்கிவிட்டது.
இந்நிலையில், தேர்தல் முடிவு குறித்து ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: "மோடி வித்தை பலித்துவிட்டது. தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு எழுவோம். இன்னும் பலமாக உருவெடுப்போம்" என்றார்.