

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நோட்டா-வுக்கு தமிழகத் தில் 5.50 லட்சம் வாக்குகள் கிடைத் துள்ளன.
எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர் களுக்காக மின்னணு வாக்குப் பதிவு கருவிகளில் “மேற்கண்ட நபர்களில் எவரும் இல்லை” (நன் ஆப் தி அபவ் நோட்டா) என்னும் பொத்தான் பொருத்தப்பட்டது. தமிழகத்தில் ஏற்காடு இடைத்தேர்தலில் முதல் முறையாக நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 4,431 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.
எனினும் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் 16-வது மக்களவைத் தொகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த தேர்தல்களில் “49-O” என்று இருந்ததே இப்போது நோட்டாவாக மாறியுள்ளது.
தமிழகத்தில் இந்த மக்களவைத் தேர்தலில் 4.05 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், 5,50,420 பேர் நோட்டாவுக்கு வாக்களித்திருப்பதாக தேர்தல் துறையினர் தெரிவித்தனர். இது சுமார் 1.5 சதவீதம் ஆகும். தமிழகத் தில் ஆம் ஆத்மி கட்சியைக் காட்டிலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
அதிமுகவுக்கு 44.3 சதவீத வாக்குகள்
தமிழகத்தில் பதிவான வாக்குகளில் அதிகபட்சமாக அதிமுகவுக்கு-44.3 சதவீத வாக்குகளும், திமுக-வுக்கு 23.4 சதவீத வாக்குகளும் கிடைத்து ள்ளன. பாஜகவுக்கு 5.3 சதவீதமும் தேமுதிகவுக்கு 5.2 சதவீதமும், காங்கிரஸுக்கு 4.2 சதவீதமும், பாமகவுக்கு 4.4 சதவீத வாக்குகளும், மதிமுகவுக்கு-3.7 சதவீதமும் கிடைத்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 1.6 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.