

ஆந்திர மாநிலம் சீமாந்திரா மாவட்டங்களில் புதன்கிழமை நடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் பல இடங்களில் வன்முறை நடந்தது. இதன் காரணமாக குண்டூரில் போலீஸார் தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஆந்திர மாநிலத்தில், 2வது கட்டமாக சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் 175 சட்டப்பேரவை, 25 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 40,708 மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. 23,000 பதற்றமான வாக்கு சாவடிகளில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு, வீடியோ பதிவுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
சில மாவட்டங்களில் லேசான மற்றும் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் வாக்கு எந்திரம் பழுதாகியதால், சம்பந்தப்பட்ட மையங்களில் தேர்தல் சற்று தாமதமாய் தொடங்கியது. சீமாந்திராவில் குண்டூர், அனந்தபூர், கடப்பா, கிழக்கு கோதாவரி, விஜயநகரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தெலுங்கு தேசம்-ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கிடையே காரசாரமான விவாதம், அடிதடி நடந்தது.
தடியடி துப்பாக்கிச் சூடு
குண்டூர் மாவட்டம் மாச்சர்லா தொகுதி கம்பம்பாடு கிராமத்தில் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் வாக்குசாவடி அருகே பரஸ்பரம் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். இதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
ராமிரெட்டி பாளையம் கிராமத்தில் பா.ஜ ஏஜென்டை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வாக்குசாவடியில் இருந்து அடித்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தோழமை கட்சியான தெலுங்கு தேசம்-ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்கிகொண்டனர். தடுக்கப்போன போலீஸாரையும் தாக்கியதால், தடியடி நடத்தப்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவியதால், ஒரு ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
கடப்பா மாவட்டம் தேவகுடி பகுதியில் இரு கோஷ்டியினர் பயங்கர தாக்குதல் நடத்தியதால், அங்கு வந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கூட்டத்தினர், போலீஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியதில் இதில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த எஸ்.பி. ராஜேஷ், உதவி ஆய்வாளர் அப்பல் நாயுடு உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அனந்தபூர் மாவட்டம் சென்னபல்லி பகுதியில், தெலுங்கு தேசம்-ஒய்.எஸ்-ஆர் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். விசாகப்பட்டினம் மாவட்டம் சீதாநகர் பகுதியில் மதியம் மாவோ யிஸ்ட்டுகள் திடீரென புகுந்து தேர் தல் மையத்தில் இருந்த இரண்டு வாக்கு எந்திரங்களை அப கரித்து சென்றனர். இந்த பகுதி யில் மறு வாக்குப்பதிவு நடத்தப் படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சீமாந்திரா தேர்த லில் ஆங்காங்கே வன்முறை தலை தூக்கினாலும் அதிக அள வில் வாக்காளர்கள் வாக்களித் துள்ளனர்.