

மத்தியில் அமையவுள்ள புதிய ஆட்சி குறித்து சட்ட வல்லுநர்களுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும் பான்மை கிடைக்காத நிலை ஏற்பட் டால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்ட நிபுணர்கள் பாலி நரிமன், சோலி சோரப்ஜி, சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆகியோர் பிரணாப் முகர்ஜியை கடந்த வாரம் சந்தித்து தங்களின் கருத்துகளைத் தெரிவித் துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக 543 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் 16-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும், தேர்தல் முடிவுகளை (வெற்றி பெற்றோர் பட்டியல்) குடியரசுத் தலைவரிடம் தேர்தல் ஆணையம் வழங்கும்.
ஆட்சி அமைக்க 272 எம்.பி.க் களின் ஆதரவு தேவை. எந்த கூட்டணிக்கும், அறுதிப் பெரும் பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்படும். அப்போது சட்ட நிபுணர்களின் ஆலோசனையுடன் குடியரசுத் தலைவர் தகுந்த முடிவுகளை எடுப்பார். அதே சமயம் ஏதாவது ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுவிட்டால், குடியரசுத் தலைவரின் பணி எளிதாகி விடும்.
அரசியல்வாதிகள், பத்திரிகை யாளர்கள் அதிகம் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஒத்திகை யில் அதிகாரிகள் ஈடுபட்டுள் ளனர்.