‘இந்தியாவை பிளவுபடுத்துவதுதான் குஜராத் மாதிரி’: அகிலெஷ் யாதவ்

‘இந்தியாவை பிளவுபடுத்துவதுதான் குஜராத் மாதிரி’: அகிலெஷ் யாதவ்
Updated on
1 min read

நரேந்திர மோடியால் முன்வைக்கப்படும் குஜராத் மாதிரி கோஷம், இந்தியாவைப் பிளவுபடுத்துவதற்காக கூறப்படுவதாகும் என உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “குஜராத் மாதிரி எதையும் சாதித்து விடவில்லை. குஜராத் மாதிரிதான் மோடியின் அரசாங்கம்; அதாவது இந்தியாவை பிளவுபடுத்துவது. அவர்கள் எவ்வாறு இந்தியாவைப் பிளவுபடுத்தியிருக்கிறார்கள், மதங்களிடையே எப்படி பிரிவினையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in