நரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பது கடினமானது: ஜெயராம் ரமேஷ் கருத்து

நரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பது கடினமானது: ஜெயராம் ரமேஷ் கருத்து
Updated on
1 min read

தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் தனி நபரின் கருத்துக்கள் மட்டுமே. மேலும், நரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பது கடினமானது என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறினார்.

16 வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 16- ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் உடனுக்குடன் அதன் விவரங்களும் வெளியாக உள்ள. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம்

உள்ளன. இந்த கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று பலத்தரப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் கூறுகையில்,

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி அடையும். தேர்தலுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் என்பது எப்போதுமே நிரைவேறாத ஒன்றாகத் தான் இருக்கிறது. 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் போலவே இம்முறையும் . பாஜக வெற்றியடையும் என்ற கருத்துக்கணிப்புகளும் பொய்யாகும். நரேந்திர மோடியை பிரதமாரக நினைத்துப் பார்ப்பது கூட கடினமானது.

மேலும் தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது உறுதியான ஒன்று. அங்கும் பாஜக வெற்றி பெறும் என்பது நிச்சயம் உண்மைக்கு புரம்பானது" என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in