நாராயணசாமி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

நாராயணசாமி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
Updated on
1 min read

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 60 ஆயிரம் வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

புதுச்சேரியில் 4 தொகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. மாலை 4.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 2,55,826 வாக்குகள் எடுத்து வென்றார். நாராயணசாமி 1,94,972 வாக்குகள் எடுத்தார்.

இதையடுத்து 60 ஆயிரத்து 854 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். 3வது இடத்தை அதிமுக வேட்பாளர் ஓமலிங்கம் பிடித்தார். இவர். 1,32657 வாக்குகள் பெற்றார். இதில் காங்கிரஸ், அதிமுக தவிர தேர்தலில் போட்டியிட இதர 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

4வது இடத்தை திமுக வேட்பாளர் நாஜிமும், 5வது இடத்தை பாமக வேட்பாளர் அனந்தராமனும் பிடித்தனர். ஆறாவது இடத்தை நோட்டா பிடித்தது. 22,268 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in